BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக இளைஞர் எழுச்சிப் பேரணி
தமிழ்நாடு Breaking

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக இளைஞர் எழுச்சிப் பேரணி

By Admin • October 17, 2026 01:06 PM • 4 views

இளைஞர் எழுச்சிப் பேரணி

காரைக்குடி அக் :18

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக இளைஞர் எழுச்சிப் பேரணி கல்லூரியிலிருந்து தொடங்கி ஆரியபவன்  ஹோட்டல் வரை நடைபெற்றது. இப்பேரணியைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணியில் சென்ற மாணவர்கள் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள் அடங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தி, பொதுமக்களிடையே ஊர்வலமாகச் சென்றனர். கலாம் அவர்களின் நற்கருத்துக்களை மனதில் கொண்டு வளம் பெற உறுதியேற்றனர். காவல்துறையின் தகுந்த பாதுகாப்புடன் நடைபெறச் செய்த இப்பேரணி ஏற்பாடுகளைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் செந்தில்குமார், முனைவர் அன்பழகன், முனைவர் சுப்பு, முனைவர் பாரதிராணி மற்றும் பேராசிரியை ஷர்மிளா ஆகியோர்  செய்திருந்தனர். இப்பேரணியில் கல்லூரியின் 300 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.