BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த தினவிழாவில் மாணவர்கள் பேச்சரங்கம் நடைபெற்றது
தமிழ்நாடு Breaking

திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த தினவிழாவில் மாணவர்கள் பேச்சரங்கம் நடைபெற்றது

By Admin • October 17, 2026 01:17 PM • 10 views

மாணவர்கள் பேச்சரங்கம் நடைபெற்றது

திருப்புத்தூர் அக் :18

சிவகங்கை மாவட்டம் 

       திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த தினவிழாவை முன்னிட்டு உள்ளூர்ப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சுழல் பேச்சரங்கம் நடத்தப் பட்டது.  வீடும், நாடும் நலம் பெறச் செய்பவர்கள் அறிவாளிகளா? புத்திசாலிகளா? என்ற தலைப்பில் மாணவர்கள் சிறப்பாகப் பேசினர்.

புற உலகில் இருந்து மனிதன் கற்றுக் கொள்வது அறிவு என்றும், மனித மனதிற்குள் இருந்து சுயமாக வெளி வருவது புத்தி என்றும் மாணவர்கள் புரிதலுடன் பேசினார்கள்.  அக விழிப்புணர்வுடன் அறிவைப் பயன் படுத்துபவர்கள் புத்திசாலிகள் என்றும், அறிவு இருந்தாலும், விழிப்புணர்வுடன் செயல்படாத அறிவாளிகளால்தான் வீடும், நாடும் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்ற கருத்தை மாணவர்கள் பல அன்றாட நிகழ்வுகளில் இருந்து எடுத்துக் கூறினார்கள். முன்னதாக அனைவரையும் பள்ளி தாளாளர் ரூபன் வரவேற்றார்,

 திருப்புத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள ஆ.பி.சீ.அ. பள்ளி, பாபா பள்ளி, கிறிஸ்துராஜா பள்ளி, லிம்ரா பள்ளி, இந்திரா காந்தி பள்ளி, ஆ.பி. அரசு ஆண்கள் பள்ளி, நா.ம. அரசு பெண்கள் பள்ளி,  புதுப்பட்டி அரசு பள்ளி மற்றும் ஆர்.சி.பாத்திமா பள்ளிகளில் இருந்து முப்பது மாணவர்கள் சுழல் பேச்சரங்கத்தில் கலந்து கொண்டனர்.

          

கிறிஸ்துராஜா பள்ளித் தலைவர் விக்டர் மாணவர்கள் பேச்சரங்கத்தை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.  மாணவர்கள் மொபைல் போன் பயன்பாட்டைக் குறைத்து, சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து தியானம் செய்து விட்டுத் திட்டமிட்டுப் படிக்கும் பழக்கத்தைக் கடைபிடித்தால் வீடும், நாடும் சிறப்புறச் செய்யும் புத்தி சாலிகளாகத் திகழ முடியும் என்று தீர்ப்புக் கூறி, பேச்சரங்கத்தை நிறைவு செய்தார். பேச்சரங்கத்தில் சிறப்பாகப் பேசிய மாணவர்கள் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

  நடைபெற்ற மாணவர்களுக்கான பேச்சரங்கில் கிறிஸ்துராஜா பள்ளி மாணவர்கள் பிரனேஷ்,  விக்னேஸ்வர பாண்டி, கிருதிக், நிஜன், ஆகாஷ், முகமது ஆரிப், பால யுகன், ஜெரால்ட் அந்தோணி, பத்மஸ்ரீ, ஜெயந்தினி தேவி, நர்மதா, ஆஷா பர்வீன், அபிராமி, ஜெகத்ரக்ஷினி, மனிஷா, ரீயா, ஹர்ஷிதாஞ்சலி, பவ்யஸ்ரீ, அபர்ணா ஸ்ரீ, கனிஷ்கா, ஷிபானா, தப தக்ஷனா, சிவகாமி, மகிழினி, அருள் பெர்னியா, அருள் இமாலிசா, அல்பினா, ஆண்டனியா மௌரின், சாரு மீனா, காவியா, அப்ரிதா ஆகியோர் உரையாற்றினர்.  தங்கள் பிள்ளைகளின் பேச்சுக்களை கேட்க வந்த பெற்றோர்களுக்கு பொன்னாடை போற்றி பள்ளி தலைவர் விக்டர் பாராட்டினார். பள்ளி முதல்வர் தபசம் கரீம் நன்றி கூறினார்.