வடகிழக்குப் பருவமழை விழிப்புணர்வுக் கருத்தரங்கு!
பருவமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருப்புத்தூர் அக் :18
சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூர் ஸ்ரீ முத்தையா மெமோரியல் கல்லூரியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பருவமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்புப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்லூரியின் முதல்வர் எஸ்.என். வெங்கடேசன் தலைமையில்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி
நவனீத கிருஷ்ணன் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் அலுவலர்கள் முன்னிலையில் மாணவ, மாணவியர்களுக்கு வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசரகாலப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், தீ விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், தீ விபத்துகளின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்களையும் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியினை
கல்லூரிப் பேராசிரியர்கள் சிவராமமூர்த்தி, வைத்தியநாதன், மாணிக்கநாச்சியார், பாண்டிச்செல்வி மற்றும் ஜாய்கிருபா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.