BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
சிறுகடல்பட்டியில் கவியரசு கண்ணதாசனின் 45 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
தமிழ்நாடு Breaking

சிறுகடல்பட்டியில் கவியரசு கண்ணதாசனின் 45 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

By Admin • October 17, 2026 01:13 PM • 11 views

கண்ணதாசனின் 45வது நினைவு தினம்

திருப்புத்தூர், அக். 18 

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில்  கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பாக நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

திருப்புத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டி கவியரசு கண்ணதாசன் பிறந்து வளர்ந்த ஊராகும். அவரின் 45 ஆவது நினைவு நாளையொட்டி அவரது  இஷ்ட தெய்வமான மலையரசியம்மன் கோயிலில் கூடிய கண்ணதாசன் இலக்கிப் பேரவையினர் அம்மனை வழிபட்டு அருகில் அமைந்துள்ள கண்ணதாசனின் திருவுருவ சிலைக்கு மாலையணிவி்த்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கவியரசின் கவிதைத் தொகுப்புகள் மக்கள் மனிதில் என்றும் அழியாத கவிதைகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அருள்பிரகாஷ், லெனின் கம்யூனிஸ்ட் நிர்வாகி எஸ்.பாரிவேல், இலக்கியப் பேரவைச் செயலாளர் பள்ளத்தூர் சோலையப்பன், கே.ஆத்தங்குடி பி.எஸ்.காந்தி, திமுக நிர்வாகி கணேசன், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் புதல்வி தேவி நாச்சியப்பன், பா.மோகன், ராமசாமி, மரியஸ்டில் பொன்னரசன் ஆகியோர் கண்ணதாசனின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக கிராம அம்பலம் வயிரவன் அனைவரையும் வரவேற்றார்.