BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
நகர வயிரவன்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள் சந்திப்புக் கூட்டம்
தமிழ்நாடு Breaking

நகர வயிரவன்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள் சந்திப்புக் கூட்டம்

By Admin • October 17, 2026 01:11 PM • 11 views

கவியரசு கண்ணதான் நினைவுநாள் சந்திப்புக் கூட்டம்

திருப்புத்தூர், அக். 18

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகேயுள்ள நகர வயிரவன்பட்டியில் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை கவியரசு கண்ணதான் நினைவுநாள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

                           நகர வயிரவன்பட்டியில் உள்ள செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் சிறுகூடல்பட்டி சிந்தனைக் கருவூலம் கவியரசு கண்ணதாசனின் 45 வது நினைவுநாளையொட்டி நடைபெற்ற புலவர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு திருப்புத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.எல்.எஸ். பழனியப்பன் தலைமை  வகித்தார். நூலகர் இரா.மகாலிங்க ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். முன்னதாக சிறுகூடல்பட்டியில் உள்ள  கண்ணதாசனின் திருவுருவசிலைக்கு  மாலையணிவித்து  மரியாதை  செலுத்தினர். பின்னர் அருங்காட்சியகத்தில் கண்ணதானின் திருவுருவ படம் திறக்கப்பட்டு மலர்தூவி நினைவு கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் கவிஞர் பரம்பு நடராஜன்,  வி.ரெத்தினம், கவிஞர் பேனா.மனோகரன், பேராசிரியர் ஆ.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக புலவர் ஆறு. மெ.மெய்யாண்டவன், தமிழ்ச்செம்மல், தேவிநாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் குரசாமி மயில்வாகனன், புலவர் சக்கந்திவேலுசாமி துரை, வளரி அருணாசுந்தர்ராஜன், மி.சுகுமாறன்,  நலஞானபண்டிதன், லி.ஜெயச்சந்திரன், கே.வி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் என்று பாராட்டப்பட்டனர். முன்னதாக வைகை பாரதி அப்துல்வாஹித் அனைவரையும் வரவேற்றார். இதில் கண்ணதாசனின் கவிதை தொகுப்புகள், பாடல்கள், அவரது புத்தகங்கள் குறித்து விவாதங்கள்  நடைபெற்றது. தொல்லியல் ஆய்வாளர்கள் புதுக்கோட்டை கரு.ராஜேந்திரன் குழிபிறை மா.இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  திருப்புத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு நிறுவனர் எல்.ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.