BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
அழகப்பா ஸ்மார்ட் ஸ்டார்ட் பள்ளியில் நவராத்திரி சந்தை சிறப்பாக நடைபெற்றது
தமிழ்நாடு Breaking

அழகப்பா ஸ்மார்ட் ஸ்டார்ட் பள்ளியில் நவராத்திரி சந்தை சிறப்பாக நடைபெற்றது

By Admin • October 16, 2026 01:32 PM • 12 views

நவராத்திரி சந்தை நடைபெற்றது.

காரைக்குடி அக் : 16

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா ஸ்மார்ட் ஸ்டார்ட் பள்ளியில் நவராத்திரி சந்தை நடைபெற்றது.  பள்ளி மாணவர்களின் தாய்மார்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தி, சந்தைப்படுத்தினர்.

நவராத்திரி என்பது பெண்களின் ஆற்றலையும் சிறப்பையும் போற்றும் திருவிழாவாகும். இதன் சிறப்பை உணர்த்தும் வகையில், தாய்மார்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதோடு, அவர்களைத் தொழில்முனைவோராக உருவாக்கவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரவும் இச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்கள் தங்களது திறமைகளைப் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளவும், சுயதொழில் குறித்த விழிப்புணர்வைப் பெறவும் இந்நிகழ்வு சிறந்த தளமாக அமைந்தது.

இந்நிகழ்வில் அழகப்பா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தாய்மார்களின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தனர்.

பெண்களின் திறமைகளையும் தொழில்முனைவுத் திறன்களையும் ஊக்குவிக்கும் இந்நிகழ்வை ஸ்மார்ட் ஸ்டார்ட் பள்ளியின் முதல்வர் வித்யா லெக்ஷ்மி, ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்து நடத்தினர்.