கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா!
சரஸ்வதி பூஜை விழா!
கோவிலூர், அக். 16:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோவிலூர் ஆதீனம் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் கலந்து கொண்டு, சரஸ்வதி தேவிக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டார்.
கல்லூரியின் தாளாளர் முனைவர் மா. வீரப்பன், முதல்வர் முனைவர் க. கலா, பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பம்சமாக, மாணவிகள் லட்சுமி, பார்வதி மற்றும் சரஸ்வதி தேவிகளின் வேடமணிந்து பங்கேற்றனர்.