BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
சிறுவயல் ஸ்ரீ முத்துமாரியம்மன் முளைப்பாரி திருவிழா
ஆன்மிகம் Breaking

சிறுவயல் ஸ்ரீ முத்துமாரியம்மன் முளைப்பாரி திருவிழா

By Admin August 19, 2026 02:10 PM 109 views

முளைப்பாரி திருவிழா

காரைக்குடி ஆக :19

சிவகங்கை மாவட்டம் 

காரைக்குடி அருகே சிறுவயல் கிராமத்தில் எழுந்துருளி அருள்பாளித்துக் கொண்டிருக்கும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் -11  அன்று  அம்மனுக்கு காப்பு கட்டி, பக்தர்கள் தங்கள் வீடுகள் தோறும் முளைப்பாரி வளர்த்தனர். 18ம் தேதி அன்று இரவு சிவன் கோவில் ஊரணியிலிருந்து ஊரார்கள் முன்னிலையில் புறப்பட்ட கரகம் பலநூறு முளைப்பாரிகளோடு ஸ்ரீ முத்துமாரியம்மன் சன்னதியை வந்தடைந்தது. பின்பு அங்கே கூடி இருந்த ஆண்களும் பெண்களும் முளைப்பாரியை சுற்றி அம்மனின் பாடல்களை பாடி கும்மி கொட்டினர். பின்பு அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும்  பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்பு ஊரின் பெருமையை விளக்கும் வகையில் பழமை மாறாத வகையில் 11 காளாஞ்சி  வழங்கி அனைவரும் சிறப்பிக்கப்பட்டனர். பின்பு அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பிரமிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு 19ம் தேதி காலை  பெண்கள் கோவிலிலிருந்து தங்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்த வளர்த்திருந்த முளைப்பாறியுடன் புறப்பட்டு ஆட்டம் பாட்டம் கிராமமே குலுங்க தெற்கு ரத வீதியின் வழியாக பொன்னழகி அம்மன் கோவில் சன்னதி அடைந்து பின்பு அங்கிருந்து சிவன் கோவில் வழியாக ஊரணியை அடைந்தது   அங்கு பெண்கள் தங்கள் சுமந்து வந்த  முளைப்பாரியை வைத்து ஆண்களும் பெண்களும் அம்மனுக்கு உகந்த முளைப்பாரி பாடலை பாடி கும்மி கொட்டி பின்பு  சிவன் கோவில் ஊரணியில் செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர் . இவ்விழாவில் பொதுமக்கள் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை சிறுவயல் ஸ்ரீ முத்துமாரியம்மன் விழா குழுவினர்  ஏற்பாடு செய்திருந்தனர்.