உத்தம்பட்டி பெரிய நாச்சியம்மன் கோவில் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உத்தம்பட்டி கும்பாபிஷேகம்
சிங்கம்புணரி ஆக :30
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் எஸ்.உத்தம்பட்டியில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்ரமணியர் கோவில், சின்னம்மாள் கோவில்,பெரிய நாச்சியம்மன் கோவிலில்,ஸ்ரீ கலிக்காரர்,ஸ்ரீ பாலமுருகன்,ஸ்ரீ வலம்புரி விநாயகர் நவகிரஹ சன்னதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு ஜீர்னோத்தாரண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சனிக்கிழமை காலை விக்னேஷ்வரபூஜை, ஸ்ரீ சித்தி விநாயகர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம்,பூர்ணாகுதி, தீபாராதனையுடன், மங்கள இசை,கும்ப அலங்காரத்துடன் முதல் கால் யாக வேள்விகள் நடைபெற்று மஹா பூர்ணாகுதி, மஹா தீபாராதனையுடன் முடிவுற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, கோபூஜை,நாடிசந்தானம்,ஸபரிசாகுதி இரண்டாம் கால ஹோமங்களுடன் முடிவுற்றது.
தொடர்ந்து மூலமந்திர ஹோமம், வேத பாராயணம்,மஹா பூர்ணாகுதி, மஹா தீபாராதனையுடன் புனித தீர்த்த குடங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தை அடைந்தது.
அங்கு பிரம்மஸ்ரீ ரகுநாதன் தீக்ட்சிதர் தலைமையிலான 16க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் யாக வேள்விகளை நடத்தினர். கிராம பொதுமக்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கும், சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.