குன்றக்குடி ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகா சன்னிதானம் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ பொன்னம்பல அடிகளார் தலைமையேற்றார்
குன்றக்குடி ஆக :31
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சரவணா நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் தனபூஜை நடைபெற்று பூர்ணாகுதி நிறைவு பெற்று தீபாராதனை கட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்பு மாலை முதல் கால யாக பூஜைகள் துவங்கி பூர்ணாகுதி நிறைவுபெற்று எந்திர ஸ்தாபனம் மருந்து சாத்துதல் வைபவம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று காலை கோமாதா பூஜை இரண்டாம் கால யாக பூஜைகள் நாடி சந்தானம், பூர்ணாகுதி நிறைவு பெற்று தீபாராதனை காட்டப்பட்டு கடம் புறப்பட்டு, மகா கும்பாபிஷேகம் திருக்கைலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகா சன்னிதானம் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ பொன்னம்பல அடிகளார் தலைமையில், முதலில் ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோவிலிலும், பின்னர் அதனை தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இம் மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டினை குன்றக்குடி சரவணா நகர் விழா குழு தலைவர் எஸ் குமார், செயலாளர் எம்எ. பழனி, பொருளாளர் பி.ராமகிருஷ்ணன் மற்றும் கும்பாபிஷேக விழா செயற்குழு உறுப்பினர்கள் ஆர் சுப்பிரமணியன் டி.திருப்பதி எஸ்பி.குமார்,எஸ்ஏ.சிவகுமார்,பி.கண்ணன், பொறியாளர் எஸ்.ரவிச்சந்திரன், மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.