BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
புனித தைனேஸ் மாத ஆலயத்திற்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள்!
ஆன்மிகம் Breaking

புனித தைனேஸ் மாத ஆலயத்திற்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள்!

By Admin September 02, 2026 04:59 AM 8 views

கிறிஸ்தவ பாடல்கள் பாடியும், ஜெபமாலை ஓதிய படியும் நடந்து சென்றனர்.

திருப்புத்தூர் ஆக :29

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் புனித அமல அன்னை ஆலயத்திலிருந்து கிறிஸ்தவர்கள் கல்லல் அருகே செவ்வரக்கோட்டையில் உள்ள புனித தைனேஸ் மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர். திருப்புத்தூர் ஆர்சி கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அதற்கு முன்பாக செவரக்கோட்டை புனித தைனேஸ் மாதா ஆலயத்தில் வழிபாடு நடத்த செல்வதை கடந்த 49 ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று ஆலயத்திலிருந்து பாதயாத்திரையாக ஏராளமான கிறிஸ்தவர்கள் சென்றனர். முன்னதாக ஆலய பங்கு தந்தை அற்புத அரசு ஜெபம் செய்து பாதயாத்திரையை துவக்கி வைத்தார். அதனை அடுத்து ஆலயத்தில் இருந்து கிளம்பிய கிறிஸ்தவர்கள் வழிநெடிகளும் கிறிஸ்தவ பாடல்கள் பாடியும், ஜெபமாலை ஓதிய படியும் நடந்து சென்றனர். இன்று மதியம் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.