கீழையப்பட்டி அருள்மிகு ஆண்டிச் சுவாமி, அருள்மிகு காயாம்பட்டி கருப்பர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
திருப்புத்தூர் ஆக :30
சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூர் வட்டம் சிராவயல் கீழையப்பட்டி கிராம தெய்வங்களான அருள்மிகு ஆண்டிச் சுவாமி, அருள்மிகு காயாம்பட்டி கருப்பர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிராவயல் கீழையப்பட்டி கிராமங்களில் அருள் வழங்கி படைத்தல் காத்தல், அளித்தல் என முத்தொழில்களையும் செய்து கருணை உள்ளத்தோடு சீர் நடத்தி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்து கரணை மழை பொழிந்து கிராமங்களை காத்து வரும் தெய்வங்களான அருள்மிகு ஆண்டிச்சாமி அருள்மிகு காயாம்பட்டி கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர். ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை காலை மங்கல இசை விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் பூர்ணாகுதி நிறைவு பெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு மாலை முதற்கால யாக வேள்வி நடைபெற்று பூர்ணாகுதி நிறைவு பெற்று தீபாராதனை கட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்பு ஆகஸ்ட் 29 சனிக்கிழமை காலை மங்கல இசையுடன் இரண்டாம் காலையாக வேள்வி துவங்கி பூர்ணாகுதி நிறைவு பெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நேற்று மாலை மங்கல இசையுடன் மூன்றாம் காலையாக வேள்வி துவங்கி பூர்ணகிரி தீபாரணை கட்டப்பட்டது. ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல இசையுடன் துவங்கிய நான்காம் கால யாக வேள்வி, கோ பூஜையுடன் துவங்கி சபர்சாகுதி, திரவியாகுதி, பாத்திரதானம் பூர்ணாகுதி நிறைவு பெற்று தீபாராதனை காட்டப்பட்டு சதுர்வேத பாராயணம் ஒலிக்க குன்றக்குடி திருநீலகண்ட நாயனார் மடாலய சர்வ சாதகம் ச. பாண்டிச்செல்வம் சிவாச்சாரியார் தலைமையில் கடம் புறப்பட்டு மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்று பின்பு அதனைத் தொடர்ந்து மகாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து மாபெரும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஆண்டிச்சுவாமி,அருள்மிகு காயாம்பட்டி கருப்பர் அருள் பெற்று சென்றனர். விழாவிற்கான ஏற்பாட்டினை விழா கமிட்டியாளர்கள் மற்றும் கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.