BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
சிங்கம்புணரியில் முன்னாள் பேரூராட்சி சேர்மன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்
தமிழ்நாடு Breaking

சிங்கம்புணரியில் முன்னாள் பேரூராட்சி சேர்மன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்

By Admin • October 16, 2026 01:39 PM • 9 views

முன்னாள் பேரூராட்சி சேர்மன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்

சிங்கம்புணரி அக் :16

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அதிமுக முன்னாள் சேர்மன் லட்சுமி பிரியா ஜெயந்தன் மற்றும் அவரின் கணவர் ஜெயந்தன் பார்வர்ட் பிளாக் கட்சி உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்

இந்த நிகழ்வில் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாச சேதுபதி கலந்து கொண்டு  அனைவருக்கும் கட்சி துண்டுகளை வழங்கி கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் நல்லாட்சி நடத்தி வரும் நமது போற்றுதலுக்குரிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் நமது கட்சியில் வரும் அனைவருக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவார் நமது கட்சி அனைவருக்கும் நல்லாட்சி வழங்குவதில் முதன்மையாக செயல்படும் முதலமைச்சர் என தெரிவித்தார்

தொடர்ந்து சிங்கம்புணரியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

அதிமுக முன்னாள் பேரூராட்சி சேர்மன் சிங்கம்புணரியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது