சிவகங்கை மாவட்ட ஜூனியர் ரெட் க்ராஸ் மற்றும் சாரண, சாரணியர்கள் இயக்க பொதுக்குழு கூட்டம்
பொதுக்குழு கூட்டம்
சிவகங்கை ஜூலை :18
சிவகங்கை மாவட்ட ஜூனியர் ரெட் க்ராஸ் மற்றும் சாரண, சாரணியர்கள் இயக்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.தண்டாயுதபாணி தலைமையில் சிவகங்கை மருது பாண்டியர் நகர் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாரிமுத்து முன்னிலை வகித்தார். சாரணர் இயக்க தேவகோட்டை கல்வி மாவட்ட தலைவர் கோவிந்த ராமானுஜம், பல்வேறு கல்வி மாவட்ட அலுவலர்கள் சீ.கசெந்தில் குமரன், த.ரங்கராஜன், ப.வடிவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். சாரணர் இயக்க பொறுப்பாளர்கள் தியோடர் இன்ப சேகரன், க.முத்துக்குமரன், பா.நாகராஜன், சரவணன் ஆகியோர் கல்வி மாவட்ட அளவில் ஆண்டறிக்கை வாசித்தனர். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன் ஜூனியர் ரெட் க்ராஸ் திட்ட அறிக்கை வாசித்தார். ஆலோசகர் நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சாரண இயக்க தேவகோட்டை மாவட்ட செயலாளர் வீர.கண்ணன் வரவேற்றார். சாரணர் இயக்க ஆணையர் நரசிம்மன் நிகழ்ச்சியை ஒருங்கமைத்தார்.
நாகராஜன் பொருளாளர்
நன்றி கூறினார்