பாஜகவின் வார்த்தைக்கு மயங்கினால் 2029 தேர்தலில் மிகவும் மோசமான முடிவுகளை திமுக சந்திக்கும் - திருப்புத்தூரில் கார்த்திக் சிதம்பரம்
திருப்புத்தூரில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்! என்ற ஊழலுக்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை எம்பி கார்த்திக் சிதம்பரம் கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார்.
திருப்புத்தூர் ஜூலை :18
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்! என்ற ஊழலுக்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர், நகர தலைவர் உட்பட ஏராளமானோர் கையெழுத்து இட்டனர். முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்பி கார்த்திக் சிதம்பரம், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
தொகுதி பங்கீடு மறு வரையறை நிறைவேறினால், இந்தி பேசுகின்ற மாநிலங்களை மையமாக வைத்து அரசியல் நடக்கும்.
543 நாடாளுமன்ற தொகுதிகளில் மகளிருக்கு 181 தொகுதிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்பது காங்கிரஸின் நிலை. இதே நிலையில்தான் திமுக கடந்த காலத்தில் இருந்தது. தற்பொழுது பாஜகவில் இருந்து திமுகவுக்கு அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
பாஜக திமுகவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டார்கள். தொகுதி மறு வரை மசோதாவை ஒத்துகொள்ளுங்கள், பின்பு ஒரே நாடு, ஒரே தேர்தலையும் கொண்டு வந்து விடுகிறோம் அதற்கும் ஒத்துகொள்ளுங்கள், 2029 சட்டமன்றத் தேர்தல் மீண்டும் வரும். நீங்கள் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை என்ற ஆசை வார்த்தையை காட்டுகின்றனர். அந்தப் பாதையில் திமுக சென்றால், இந்தத் தேர்தலில் வந்த முடிவுகளை விட, மிகவும் மோசமான முடிவுகள் வரும்.
தமிழ்நாட்டில் தவெக கூட்டணி வலுவாக உள்ளது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகள் ஒரு கருத்தோடு இருக்கிறோம்.
திமுக பிஜேபி எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொண்டார்கள் என்றால் விபரீதம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
ஊழலை செயல்திறன் மூலமாகவும், வெளிப்படுத்தன்மை மூலமாகவும்தான் ஒழிக்க முடியுமே தவிர, அதிகாரிகளிடம் விருப்பத்தின்பேரில் செயல்படும் அதிகாரம் இருந்தால் ஊழலை ஒழிக்க முடியாது.
தவெக விற்கு நல்ல மெஜாரிட்டி இருக்கிறது. அவர்களுக்கு எந்தவிதமான புது எம்எல்ஏக்களும் தேவையில்லை. அவர்களை விட்டு கூட்டணி கட்சிகள் யாரும் போகப்போறதும் இல்லை, புதிதாக கட்சிகளை அவர்கள் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
அதிமுக உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள் பதிவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அது அந்த தொகுதி மக்களுக்கு தேவையில்லாத ஒரு சர்ச்சை. திருப்பி இடைத்தேர்தலை சந்திக்க வைக்க வேண்டியது தவிர்க்க வேண்டிய விஷயம் இதை நான் ஏற்கவில்லை.
நவோதயா பள்ளி வந்தால் இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. அது ஒரு புறம் இருக்க தமிழ் கற்றுக் கொள்வதற்கு அவர்களிடம் போதிய ஆசிரியை இருக்கிறார்களா?
தமிழ் கற்றுக் கொடுக்க எங்களுக்கு ஆசைதான் ஆனால் ஆசிரியர்கள் இல்லை என்று சொல்வார்கள். பின்பு மாநில அரசு நடத்தும் பள்ளியிலும் மும்மொழி கொள்கையை ஒத்துக் கொண்டால்தான் நிதி ஒதுக்குவோம் என்ற அச்சம் உள்ளது.
ஜவஹர்லால் நேருவின் பெயரை மாற்ற வேண்டும் என்பது பாஜகவின் ஆசை
தவெக ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கூட்டணி கட்சியிலிருந்து யாராவது தவெக வில் சேர்ந்தால் நாங்கள் சேர்ந்து கொள்ளமாட்டோம், என கடந்த முறை திமுக எடுத்த கொள்கை முடிவு போல தவெக எடுக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் கத்தி எடுத்து குத்திக் கொள்வது, அரசு மீது குற்றம் சொல்ல மாட்டேன். இது சிஸ்டமேட்டிக் பிராப்ளம். நல்ல வழியில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். ஆசா பாசங்களுக்காக நடக்கின்ற குற்றங்களை எந்த ஒரு அரசாங்கமும், காவல்துறையும் தடுக்க முடியாது. வேண்டுமென்றால் விசாரித்து தண்டனை வாங்கி கொடுக்கலாம்.
இந்தியர்களை பூட்ஸ் காலால் மிதித்து ஒடுக்க வேண்டும், அடக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர்கள் காவல்துறையை உருவாக்கினார்கள். அதே எண்ணத்தில், மனப்பான்மையோடு தான் இன்றும் காவல்துறை உள்ளது. இது மாற வேண்டுமென்றால் டிஜிபியில் இருந்து கான்ஸ்டபிள் வரை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். கவுன்சிலிங், கொடுக்க வேண்டும்.
இன்னும் ஆறு மாத காலங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என அனிதா ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து கேட்டபொழுது, அரசியல் சாசனத்திலும், சட்டத்திலும் கற்பனைக்கு தடையும் இல்லை, எல்லையும் இல்லை. கலர் கலராக கனவுகள் காணலாம் என்றார்.
மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் கர்நாடகா தமிழக காங்கிரஸ்கள் வெவ்வேறு நிலைபாடுகளில் உள்ளது என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தேசிய கட்சியாக இருப்பதால் எல்லா பிரச்சனைகளிலும் ஒரே முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ள நிலையில், தாங்கள் ஏதும் கருத்து சொல்ல விரும்புகிறீர்களா என கேட்ட பொழுது - என்னிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. அதனால் அதை பற்றி எனக்கு தெரியாது என நகைச்சுவையாக பதில் அளித்தார்.
தமிழ்நாடு நாள் குறித்து கேள்வி கேட்டபோது, எனக்கு அது பற்றி கவலை இல்லை. ஒரு மாவட்டத்தில் மாதத்திற்கு 2000 பேர் நாய் கடி படுகிறார்கள் அது ஆயிரமாக குறையுமா? அதவிட்டுட்டு இன்னைக்கு தமிழக நாளா? தமிழ்நாடு நாளா ? இதில் எல்லாம் எனக்கு ஆர்வம் கிடையாது. பிறந்தநாள், இறந்த நாள், அனுசரிப்பு நாளில் எனக்கு விருப்பம் கிடையாது
திமுகவுடன் நாம் தமிழர் நெருங்கி வருவது குறித்த கேள்விக்கு
தனியாக பேட்டிங் செய்து எவ்ளோ நாள்தான் தோற்றுப் போவது, யாருடனாவது சேர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, வட்டாரத் தலைவர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், வீரமணி, ராஜேந்திரன், இன்பேன்ட், திருப்புத்தூர் நகர் தலைவர் சீனிவாசன், சிங்கம்புணரி நகர் தலைவர் தாயுமானவர், திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகை ராஜா, முன்னாள் சிறுபான்மை பிரிவு எம்கேஎம்.ரபீக் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.