தவெக பொதுச் செயலாளர் பிறந்தநாள் விழா!
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய திருப்புத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகள்
திருப்புத்தூர் ஜூலை :18
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு சுட சுட அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு வழங்கினார். தவெக பொதுச் செயலாளர் பிறந்தநாளில் மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு இனிப்புகள் மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், பொதுமக்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர். இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்புத்தூர் நகர, ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.