BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Jul 21, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
தேவகோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு
தமிழ்நாடு Breaking

தேவகோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

By Admin July 19, 2026 07:20 AM 35 views

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தேவகோட்டை ஜூலை :19

சிவகங்கை மாவட்டம் 

தேவகோட்டை ஸ்ரீ ஆண்டவர் சிபிஎஸ்இ இண்டர் நேஷனல் பள்ளியில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சி.கண்ணன் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார், பள்ளி தாளாளர் எஸ்.முத்துக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காஸ் மாஸ் லயன்ஸ் சங்கத்தலைவர் ஆர்.நிட்டில் பொருளாளர், வி.முத்துப்பழனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்‌ முத்துவேல், மேனாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஜான்சிராணி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்  பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை கவிஞர். கி.ஏகோஜிராவ் செய்திருந்தார்.