பிரான்மலை ஹஜரத் ஷேக் அப்துல்லா அவுலியா தர்ஹா சந்தனம் பூசும் விழா கொடியேற்றம்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிரான்மலை ஹஜரத் ஷேக் அப்துல்லா அவுலியா தோப்பு தர்ஹாவிலும் மலை உச்சியில் உள்ள ஹஜரத் ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்ஹாவிலும் சந்தனம் பூசும் விழாவிற்காக கொடியேற்றத்துடன் துவங்கியது
சிங்கம்புணரி ஆக : 25
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிரான்மலை ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா அவுலியா தர்ஹா ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும், இந்த தர்ஹாவில் ஆண்டு தோறும் (ரயியுல் அவ்வல் பிறை 10 ம் நாள்) சந்தனம் பூசும் விழாவிற்காக கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் பிரான்மலை மலை அடிவாரத்தில் உள்ள ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா அவுலியா தோப்பு தர்ஹாவில் உள்ள கொடிமரத்தில் சந்தனம் பூசும் விழாவிற்காக துவா ஓதப்பட்டு தர்ஹாவில் கொடியேற்றம் நடைபெற்றது.ஸஅதனை தொடர்ந்து பிரான்மலையில் 2500 அடி உயரத்தில் மலை உச்சியில் உள்ள ஹஜரத் ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்ஹாவில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
சந்தனம் பூசும் விழா 03.09.2026 வியாழக்கிழமை இரவு பிரான்மலை ஐந்தூர் கிராமத்தார்கள் அனைத்து சமுதாய மக்கள், சுற்றுவட்டார பெரியோர்கள் முன்னிலையில் சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 2500 அடி உயரமும் 7 மைல் தூரமுள்ள மலை உச்சியை சென்றடைந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மலை உச்சியில் உள்ள தர்ஹாவில் 1120-ம் ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற உள்ளது.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை நிர்வாகக் குழு மற்றும் பிரான்மலை, செல்லியம்பட்டி, வார்ப்பட்டு
ஹக்த்தார்கள், ஷேக் அப்துல்லா அவுலியா தர்ஹா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.