திருப்புத்தூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா!
வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்புத்தூர் ஆக :24
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தேரோடும் வீதியில் அனைவருக்கும் அருள் பாலிக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் 3 வது கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
நடைபெற்ற மூன்றாவது கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூஜைகள் துவங்கி, நேற்று ஆகஸ்ட் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:15 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி காலை 9 மணிக்கு பூர்ணாகுதி நிறைவு பெற்று 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றினார். தொடர்ந்து ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்கு கலச நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.