BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
திருவைரவன்பட்டி  ஸ்ரீ திருமெய்ஞான புரீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத தேய்பிறை பைரவ அஷ்டமி யாகம்
ஆன்மிகம் Breaking

திருவைரவன்பட்டி ஸ்ரீ திருமெய்ஞான புரீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத தேய்பிறை பைரவ அஷ்டமி யாகம்

By Admin August 06, 2026 03:12 PM 23 views

பைரவ அஷ்டமி யாகம்

திருப்புத்தூர் ஆக :06

சிவகங்கை மாவட்டம்  திருக்கோஷ்டியூர் அருகே அமைந்துள்ள    திருவைரவன்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ திருமெய்ஞான புரீஸ்வரர்  திருக்கோவிலில் ஆடி மாத பைரவ அஷ்டமி திருநாளை முன்னிட்டு மகா பைரவர் யாகம் நடைபெற்றது முன்னதாக  பைரவர் சன்னதி முன்பு பிரம்மாண்ட யாக குண்டம்  அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பாக அலங்கரித்தனர் பின்னர் கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது யாக பூஜையில்   பைரவர் சுவாமி மூல மந்திரங்கள்  கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து பூர்ணகுதி அளிக்கப்பட்டன பின்னர் அலங்கரிக்கப்பட்ட கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க கோடி தீபம், கும்ப தீபம், மயில தீபம், யானை, சிங்கம் உள்ளிட்ட தீபங்கள் காண்பித்து ஷோடஷ உபசாரங்கள்  நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஏக முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவர் சுவாமி அம்மனை வழிபட்டனர். 

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இவ்விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ரவிசந்திரன் மற்றும் மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

இக்கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது.