BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Jul 21, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
நாட்டரசன் கோட்டையில் ஏ ஐ டி யு சி கண்ணுடை நாயகி அம்மன் ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா நடைபெற்றது
தமிழ்நாடு Breaking

நாட்டரசன் கோட்டையில் ஏ ஐ டி யு சி கண்ணுடை நாயகி அம்மன் ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா நடைபெற்றது

By Admin July 18, 2026 04:57 AM 13 views

ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா

சிவகங்கை ஜூலை :18 

 

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் ஏ ஐ டி யு சி கண்ணுடை நாயகி அம்மன் ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஞானவேல் பொருளாளர் வேல்முருகன் துணைத்தலைவர் ராசாத்தி துணை செயலாளர் செல்வ களஞ்சியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் பெயர் பலகையை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் திறந்து வைத்து, ஆட்டோ சங்கத்தின் வரலாற்றை எடுத்துக் கூறினார். மாநில துணைத்தலைவர் 

ஆகாராஜா ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய வேண்டும். அரசு தரும் பல்வேறு நலத்திட்டங்களை பெற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 21 ஆர்ப்பாட்டம் நடத்தி முதலமைச்சருக்கான மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பது சம்பந்தமாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ் ஏ ஐ டி யூ சி தொழிற்சங்க மாவட்ட தலைவர் காளை லிங்கம் கவுன்சிலர் சின்ன மருது பாண்டியன் முன்னாள் கவுன்சிலர் ஆயில் கருப்பையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ராசங்கம், ராமநாதன் மற்றும் ஸ்டாண்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.