BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Jul 21, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக்கில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு Breaking

காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக்கில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

By Admin July 17, 2026 05:46 PM 12 views

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காரைக்குடி ஜூலை :17

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை அழகப்பாபுரம் சப் இன்ஸ்பெக்டர், காரைக்குடி காவல் ஆய்வாளர் மற்றும் சமூக ஆர்வலர் கருப்பையா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, "போதைக்கு எதிராக குரல் கொடுப்போம்", "இளைஞர்களின் எதிர்காலம் காப்போம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி காரைக்குடி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பேசுகையில்

"போதை பொருட்களால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி, விளையாட்டு மற்றும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

கல்லூரி முதல்வர் நன்றி கூறினார். பேரணிக்கு ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.