திருப்புத்தூர் அருகே ஆடி படைப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு
500 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!
திருப்புத்தூர் ஜூலை :18
சிவகங்கை மாவட்டம் பட்டமங்களம் அருகே மின்னல்குடிப்பட்டியில் மேலத்தெரு அருள்மிகு காளியாத்தாள் கோயில் ஆடி படைப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாகக் நடைபெற்றது. முன்னதாக விழாக்குழுவினர் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்து மஞ்சுவிரட்டு திடலுக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கிராம கோயில் காளைகளுக்கு வேட்டி துண்டுகள் அணிவித்து மரியாதை செய்தனர். பின்பு விழாக் குழுவினர் தொழுவிலிருந்து கோயில் காளைகள் மட்டும் அவிழ்த்து விட்டனர். இந்த மஞ்சுவிரட்டுக்கு அனுமதி இல்லை என்பதால் கோயில் காளைகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன. விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு ஓடிய காளைகளை அடக்க முற்பட்டனர். தறிகெட்டு ஓடிய காளைகள் முட்டியதில், மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் என சுமார் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.