கொட்டும் மழையில் நகர வயிரவன்பட்டியில் ஆடி பிரமோற்சவ தேரோட்டம்! பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்!
ஆடி தேரோட்டம்!
திருப்புத்தூர் ஆக :15
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகில் நகர வைரவன்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் மற்றும் வயிரவர் சுவாமி திருக்கோயிலில், ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோயில்களில் ஒன்றாகிய இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலையில் சுவாமி வெள்ளிரதத்தில் புறப்பாடும், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. 9 ஆம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருந்தது. திடீரென கனமழை கொட்டி தீர்த்ததால் தேரோட்டமானது தாமதமாக துவங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நகரத்தார்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து, தீப ஆராதனை நடைபெற்று மாலை 5.30 மணியளவில் தேரோட்டமானது துவங்கியது. இப்போது பெண்கள், சிறுவர் உட்பட ஏராளமானோர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது திருக்கோயிலைச் சுற்றி வலம் வந்தது. வழிகெடிகளும் ஏராளமான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். 10 ஆம் திருநாளான இன்று தீர்த்தவாரி வைபவமும், 11 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்திகள் வயிரவசாமி மகா அபிஷேகமும், மாலை திருக்கல்யாண வைபவமும், இரவு சுவாமிகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஏழக பெருந்திருவான வயிரவன்கோயில் அறங்காவலர் தலைவர் நாகப்பன், செயலர் ஐயப்பன், துணைத் தலைவர் சொக்கலிங்கம், துணைத் தலைவர் காரைக்குடி ராமசாமி, இணைச் செயலர் அரியக்குடி ராமசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்
திருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாளான நேற்று, காலை 9.10 மணியளவில் சாமி திருத்தேர் எழுந்தருளினார். மாலை 3.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.
இந்த பிரமோற்சவ திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.