BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி சார்பாக, ஆசிரியர் தின விழா கொண்டாடினர்.
தமிழ்நாடு Breaking

ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி சார்பாக, ஆசிரியர் தின விழா கொண்டாடினர்.

By Admin September 02, 2026 05:42 AM 11 views

ஆசிரியர் தின விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 

ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி சார்பாக, ஆசிரியர் தின விழா தலைவர் ரொட்டேரியன் ருக்மா சரவணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தின விழாவில்  5 ஆசிரியர்களுக்கு  அறிவிச்சுடர் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டது. காரைக்குடி ஸ்ரீ கலைவாணி இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியை ஆர்.பத்மப்ரியா, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியை கற்பக லில்லி, காரைக்குடி எஸ் எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஸ்டெல்லா ராணி, ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி ஆசிரியை  முனீஸ்வரி, வித்யகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆர். சத்தியமூர்த்தி ஆகியோருக்கு அறிவிச்சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரோட்டரி கிளப் காரைக்குடி செயலாளர்  ரொட்டேரியன்  மணி பாண்டி அனைவரையும் வரவேற்றார். விழாவில் கார்மேலா 2026  நடைபெற உறுதுணையாக இருந்த ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி உறுப்பினர்களுக்கு விருது வழங்கினர். விழாவில் துணை ஆளுநர் ரொட்டேரியன்  எம்பிஹெச்எப் கேவி.ஜெயபிரகாஷ் மோகன் விருது பெற்ற  அனைவரையும் வாழ்த்தினார். விழாவில் தொழிற்கல்வி சேவை இயக்குனர் ரொட்டேரியன் பிஏஜி எம்.சண்முகம் அனைவரையும் வாழ்த்தினார்.