BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
அறிவியல் இயக்க துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி
தமிழ்நாடு Breaking

அறிவியல் இயக்க துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி

By Admin September 02, 2026 04:57 AM 7 views

வினாடி வினா போட்டி

திருப்புத்தூர் ஆக :29

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக சிவகங்கை மாவட்டத்தில் துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி திருப்புத்தூர் பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆடங்கிய குழுவில் இடைநிலைபிரிவில்  கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியும், உயர்நிலைப் பிரிவில் கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மற்றும் கொத்தமங்கலம்  செல்வ விநாயகர் உயர்நிலைப்பள்ளியும், மேல்நிலைப் பிரிவில் கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளிகளும் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.‌ 

மெட்ரிக் பள்ளிகள் அடங்கிய குழுவில் ஜூனியர் பிரிவில் காரைக்குடி இந்திரா நகர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மற்றும் புதுவயல் ஸ்ரீவித்யாகிரி பள்ளியும், சீனியர் பிரிவில் காரைக்குடி டி.டி. நகர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மற்றும் ஏரியூர் காந்தி  பள்ளியும், சூப்பர் சீனியர்  பிரிவில் திருப்பத்தூர் பாபா அமீர் பாதுஷா மேல்நிலைப் பள்ளி மற்றும் புதுவயல் ஸ்ரீவித்யாகிரி பள்ளியும் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.  

மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பள்ளிகள் அக்டோபர் மாதம் ராமநாதபுரத்தில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளன.

        காளையார் மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, கல்லல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, திருப்புத்தூர் கிறிஸ்து ராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி அழகப்பா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கண்டரமாணிக்கம் சேது ஐராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொண்டன  

          போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட துணைத் தலைவர் பாபா அமீர் பாதுஷா தலைமை வகித்தார். திருப்புத்தூர் கிளைத் தலைவர் விக்டர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தனர். பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வரதராஜன்  வரவேற்புரை ஆற்றினார், கிளைச் செயலாளர் மெஹர் பானு நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் பிரபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து  ஒருங்கிணைத்தார்.