BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
திருப்புத்தூர் நூலகத்தில் இலக்கியச் சந்திப்பு.
தமிழ்நாடு Breaking

திருப்புத்தூர் நூலகத்தில் இலக்கியச் சந்திப்பு.

By Admin September 02, 2026 05:12 AM 9 views

இலக்கியச் சந்திப்பு.


திருப்புத்தூர் ஆக :30

சிவகங்கை மாவட்டம் 
திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை பொது நூலகத்தில் வாசகர் வட்டத்தின் சார்பில் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்புத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்
எஸ்.எல்.எஸ்.பழனியப்பன்
தலைமை தாங்கினார்.
கிளை நூலகர் இரா. மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றுப் பேசினார்.
வாசகர் வட்டத் தலைவர் லி.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் கவிஞர் கம்பம் பாரதன் 
"தெரிந்ததும் தெரியாததும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
எழுத்தாளர் 
வான்மதி முத்துக்குமார்,
கவிஞர் கோவிந்தராஜன்,
கவிஞர் குத்புதீன்,
ஆசிரியர் பா.லெட்சுமி,
ஆசிரியர் வீ.ரெத்தினம்,
கவிஞர் தமிழரசன்,
பொறியாளர் பாஸ்கரன் மற்றும்
வாசகர் வட்ட நண்பர்கள்
பங்கேற்றனர்.
நூலக உதவியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.
கூட்ட ஏற்பாடுகளை நூலக உதவியாளர்கள்
நாராயணன், ராமகிருஷ்ணன்,
நவீன் செய்திருந்தனர்.