BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
திருப்புத்தூரில் கே.எஸ்.ஆர். பல் மருத்துவமனை திறப்பு
தமிழ்நாடு Breaking

திருப்புத்தூரில் கே.எஸ்.ஆர். பல் மருத்துவமனை திறப்பு

By Admin September 02, 2026 05:14 AM 8 views

திறப்பு விழா சலுகையாக 20% தள்ளுபடி

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இன்று புதிதாக கே.எஸ்.ஆர். பல் மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. அண்ணா சிலை அருகே உள்ள சின்ன தோப்பு தெருவில், அழகப்பா பாக்கியம் திருமண மண்டபம் பின்புறம், ஸ்ரீராம் டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட் அருகில் இந்த புதிய பல் மருத்துவமனை இன்று திறப்பு விழா காண உள்ளது. இந்த மருத்துவமனைக்கு டாக்டர் எஸ்.வாசு எம்டிஎஸ், சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உள்ளார். இந்த மருத்துவமனை அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்கள், தரமான சிகிச்சை, அதிநவீன உபகரணங்கள், நியாயமான கட்டணம், சுகாதாரமான சூழல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்டு செயல்படுகிறது. திருப்பத்தூர் நகரில் திறக்க உள்ள இந்த பல் மருத்துவமனை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளதாக பொதுமக்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது நலன் கருதுபவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திறப்பு விழா சலுகையாக நாளை செப்டம்பர் 1ம் தேதி (01.09.2026) முதல் செப்., 30 ம் தேதி (30.9.2026) வரை அனைத்து சிகிச்சைகளிலும் திறப்பு விழா சலுகையாக 20% தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல் மற்றும் வாய் பராமரிப்பு பொருட்கள், மருந்துகள், மாத்திரைகள் என அனைத்திற்கும் 20% தள்ளுபடியை பல் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. குழந்தைகள் பல் மருத்துவம், பல் வரிசையை சீரமைத்தல், ஈறு சிகிச்சை, பல் சுத்தம் செய்தல், பல் சொத்தை அடைத்தல், வேர் சிகிச்சை, சொத்தை பல் அகற்றுதல், ஞான பல் அகற்றுதல், நிரந்தரமாக பல் கட்டுதல், முழு பல் செட் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில்  வழங்கப்பட உள்ளது. திருப்பத்தூர் நகரில் மருத்துவத் துறையில் சிறந்த விளங்கும் மருத்துவர்கள் ஜெகதீசன், சியாம சுந்தரி ஆகியோர் இந்த மருத்துவமனையை திறந்து வைக்கிறார்கள். இன்று காலை 6.30 மணி அளவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்படும் இந்த மருத்துவமனையின் சேவையை பொதுமக்கள்  பயன்படுத்திக் கொள்ளலாம்.