ஶ்ரீ இராஜராஜன் சி பி எஸ் இ பள்ளி ரோல் பால் போட்டியில் வெற்றி
ரோல் பால் போட்டியில் வெற்றி
அமராவதி புதூர் ஜூலை : 06
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடியில் மாவட்ட அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் காரைக்குடி ஸ்ரீ இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் பல்வேறு வயது பிரிவுகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்கள் வென்றுள்ளனர். 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தனுஷ் ஆதித்யா, 8 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சித்தார்த் அபிமன்யு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீ இராஜராஜன் கல்விக்குழுமத் தலைவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சுப்பையா பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளியின் முதன்மை முதல்வர் வெங்கட்ட ரமணன் மற்றும் தலைமை ஆசிரியை தனலட்சுமி பிரைமரி தலைமை ஆசிரியை வாசுகி ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களை பாராட்டினர்.