தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ் கவிஞர் நாள் விழா.
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ் கவிஞர் நாள் விழா.
திருப்புத்தூர் ஏப் : 29
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ் கவிஞர் நாள் விழா. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மகிபாலன்பட்டி கனியன் பூங்குன்றனார் நினைவுத்தூணுக்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்தி விழாவிற்கு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சிவப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். வள்ளுவர் பேரவை நிறுவனத் தலைவர் திருக்குறள் தேனீ மெ.ஜெயம் கொண்டான் சங்கத் தமிழ் வளர்த்த சிவகங்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். காரைக்குடி வித்தியாகரி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் திருக்குறள் செல்வன் செ. தமிழ்ச்செல்வன் ஒக்கூர் மாசாத்தியார் கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்க பாடல்களை முற்றோதல் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். தமிழ்ச்செல்வன் எழுதிய வட்டமிடு கண்டுபிடி, கதைக்குள் விதை நூல்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வாழ்த்துக்களைப் பெற்றார்.