BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Jun 03, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
தமிழ்நாடு Breaking

ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

By Admin May 02, 2026 05:08 AM 23 views

ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் சொ.சுப்பையா தலைமை தாங்கினார்

காரைக்குடி மே :02

சிவகங்கை மாவட்டம் 

காரைக்குடி அமராவதி புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் சொ.சுப்பையா தலைமை தாங்கினார். அவரது தலைமை உரையில் அனுபவங்களை பெற்றுக் கொள்வது தான் கல்வி,  மாணவர்கள் அவர்களின் அனுபவத்தைக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். திறமை வாய்ந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்குவது அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாகவும் , வாழ்வில் பெரிய வெற்றிகளை அடையவும் உதவுகிறது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான முனைவர் இராமராஜன் , விஜய் டிவி குக் வித் கோமாளி நடிகர் புகழ், சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல்வாழ்வு துறை அலுவலர்  ரமேஷ் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரியின் டீன் முனைவர் சிவக்குமார்  வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் முனைவர் இராமராஜன்  மாணவர்கள் தங்களுக்கென ஒரு குறிக்கோள் அமைத்து அதை நோக்கி செல்ல வேண்டும் என்று கூறினார். மாணவர்கள் நன்றாக படித்து வேலைக்கு சென்று தங்கள் பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். மற்றொரு சிறப்பு விருந்தினரான நடிகர் புகழ் பேசுகையில் மாணவர்கள் கடினமாக உழைத்து உயரிய இடத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்தினார் . மேலும் செல்ஃபோன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு பெற்றோர்களுடனும் நண்பர்களுடனும் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறினார்.

மேலும் ரமேஷ் கண்ணன் பேசுகையில் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார்.‌ நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும், கலை-இலக்கிய  போட்டிகளிலும், அண்ணா பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் 85% மேல் தேர்ச்சி அளித்த 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு விருதுகளும் பரிசு‌த் தொகையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடனம், நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ்  நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.