BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Jun 03, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
காரைக்குடி லலிதா ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி பங்குனி திருவிழா
தமிழ்நாடு Breaking

காரைக்குடி லலிதா ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி பங்குனி திருவிழா

By Admin April 29, 2026 01:38 PM 32 views

காரைக்குடி மறவர் நல சங்கம் சார்பில் மண்டகப்படி நடைபெற்றது.

காரைக்குடி ஏப் :29

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி லலிதா ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு, காரைக்குடி மறவர் நல சங்கம் சார்பில் மண்டகப்படி  நடைபெற்றது. முன்னதாக மதியம் லலிதா ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் சுமார் 3000 பேர் கலந்து கொண்ட மாபெரும் அன்னதானம், காரைக்குடி மறவர் நலச் சங்கத் தலைவர் சி .செந்தில்நாதன்  ஐஆர்எஸ் தலைமையில் நடைபெற்றது. பின்பு மாலை காரைக்குடி டி.டி நகர் பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்ட மறவர் நலச் சங்க உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பூத்தட்டினை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காரைக்குடி மறவர் நல சங்கத்தின் சார்பாக வெள்ளி தேர் கோவில் பிரகாரத்தில் இழுக்கப்பட்டது. பின்பு இரவு மாபெரும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, கலையரங்கில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் சி. செந்தில்நாதன், மதுரை அனைத்து மறவர் நல கூட்டமைப்பு பொதுச்செயலாளர் விஜயகுமார், எஸ் ஆர் தேவர், ஐந்து நிலை நாட்டு மறவர் நல சங்க தலைவர் குணசேகரன், முன்னாள் டிஎஸ்பி மாறன், சங்க செயலாளர் நியூ ராஜ் லேப் வடிவேல், பொருளாளர் ராஜேந்திரன் ,துணைத் தலைவர் அக்கா மெஸ் மகாலிங்கம், கௌரவ ஆலோசகர் லட்சுமி மார்பிள்ஸ் கார்த்திகேயசாமி, மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.