காரைக்குடியில் உலகத் தரம் வாய்ந்த சிசு நியோ கேர், சிசு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
காரைக்குடியில் உலகத் தரம் வாய்ந்த சிசு நியோ கேர், சிசு மருத்துவமனை திறப்பு விழா
காரைக்குடி ஏப் :29
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலகத் தரம் வாய்ந்த சிசு நியோ கேர், சிசு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. காரைக்குடி சுப்ரமணியபுரம் வடக்கு 6வது வீதியில் நிறுவப்பட்டுள்ள மருத்துவமனை திறப்பு விழாவில் பிரபல மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் ஏனைய குழந்தைகள் அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் வகையில் இம் மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளதாக மருத்துவர் மணிகண்டன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகள், மற்றும் குறைமாத குழந்தைகளுக்கு தேவைப்படக்கூடிய தீவிர சிகிச்சை பிரிவு, வென்டிலேட்டர் வசதி ,இன்குபேட்டர் வசதிகள், மதுரை திருச்சி போன்ற பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இணையாக உலகத்தரம் வாய்ந்த உன்னத மருத்துவம் காரைக்குடி சிசு நியோ கேர், சிசு மருத்துவமனையில் கிடைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது மருத்துவமனையின் சிறப்பம்சமாகும். மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் மணிகண்டன் மற்றும் டாக்டர் கலா ராணி மணிகண்டன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.