BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Jul 21, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால்  நடும் வைபவம்
ஆன்மிகம் Breaking

திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்

By Admin July 21, 2026 03:12 PM 5 views

முகூர்த்தக்கால் நடும் வைபவம்

திருப்புத்தூர், ஜூலை, 20 

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ராஜகாளியம்மன், ஆலமரத்துக் காளியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி  முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.

                               இவ்விழாவையொட்டி கோயில் வளாகத்தில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் நிர்வாகம் மற்றும் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்வு நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது. பின்னர் அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடித்திருவிழா தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு வெள்ளியும் கூழ் ஊற்றுதல், மஞ்சள் அரைத்தல், காப்புக்கட்டுதல், நடைபெறும். பின்னர் திருவிழா நாளான 5 வது வெள்ளிக்கிழமை பால்குடம், பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெறும் அனனதானம், மாலை பூத்தட்டு ஊர்வலம், இன்னிசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை ராஜகாளியம்மன் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் செட்டியதெரு இளைஞர் குழுவினர் செய்து வருகின்றனர்.