நாச்சியாபுரம் அருள்மிகு நாச்சியாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா
நாச்சியாபுரம் அருள்மிகு நாச்சியாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நாச்சியாபுரம் அருள்மிகு நாச்சியாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது. ஏப்ரல் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அம்பாள் கேடயத்தில் திருஉலா நிகழ்வும், 22ம் தேதி புதன்கிழமை தாமரை வாகனத்தில், 23 ம் தேதி வியாழக்கிழமை அன்னவாகனத்தில், 24 ம் தேதி வெள்ளிக்கிழமை காமதேனு வாகனத்தில், பின்பு சனிக்கிழமை சிம்ம வாகனத்தில், ஞாயிற்றுக்கிழமை ரிஷப வாகனத்தில், திங்கட்கிழமை குதிரை வாகனத்தில் திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது. 28ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தேர் திருஉலா, பின்பு புதன்கிழமை தேர் திருஉலா நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக பத்தாம் நாள் நிகழ்வாக, சிங்கப்பூர்வாழ் நாச்சியாபுரம் நகரத்தார்கள் சார்பாக அம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாட்டினை நாச்சியாபுரம் நாச்சியாரம்மன் திருக்கோவில் அறங்காவலர் ஏற்பாடு செய்திருந்தனர்.