பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரி அம்பாள் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரி அம்பாள் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
திருப்புத்தூர் ஏப் : 01
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே
பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரி அம்பாள் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்
நடைபெற்றது.
இக்கோயிலில் மார்ச் 14 இரவில் அடைக்கலம் காத்த அய்யனார் பூதம் எடுப்பு நடந்து விழாவிற்கு காப்புக்கட்டப்பட்டது. மார்ச் 20 ல் சைவ முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், அபிேஷகம் நடந்தது.
மறுநாள் பூதம் விநாயகர் கோயில் வந்தடைந்தது. மார்ச் 22ல் பூதம் அய்யனார் கோயில் சேர்க்கையானது. மார்ச் 23 ல் மதியாத கண்ட விநாயகர் புறப்பட்டு அழகுசவுந்தரி அம்மன் கோயில் எழுந்தருளி
பூச்சொரிதல் நடந்தது. மார்ச் 24 ல் பங்குனித்திருவிழா முதல் திருநாளை முன்னிட்டு காலையில் விநாயகர், அம்பாள் காப்புக்கட்டுதலும், இரவில் கேடயத்தில் திருவீதி உலாவும் நடந்தது.
தொடர்ந்து தினசரி காலையில் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது.
நேற்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு அம்பாளும், விநாயகரும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் அம்பாள், விநாயகருக்கு அர்ச்சனை செய்து
வழிபட்டனர். மாலை 5:20 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திரளாக பக்தர்கள் பங்கேற்று தேரோடும் வீதிகளில் வலம் வந்தது. இன்று காலை 10:30 மணிக்கு மேல் தீர்த்தம் கொடுத்தலும், இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும். நாளை காலை ரிஷப வாகனத்தில் புறப்பாடும், காலை 10:30 மணிக்கு மேல் காப்புக்களைதலும், இரவில் ஊஞ்சல் வைபவமும் நடந்து விழா நிறைவடையும். ஏற்பாட்டினை பட்டமங்கலம் நாட்டார், நகரத்தார் செய்தனர்.