BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Apr 17, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு
திருப்புத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகே ஜி, மற்றும் முதல் வகுப்பு மாணவர்களுக்கான மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு Breaking

திருப்புத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகே ஜி, மற்றும் முதல் வகுப்பு மாணவர்களுக்கான மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

By Admin April 02, 2026 02:04 PM 46 views

திருப்புத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி, மற்றும் முதல் வகுப்பு மாணவர்களுக்கான மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருப்புத்தூர் ஏப்:03

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி, மற்றும் முதல் வகுப்பு  மாணவர்களுக்கான மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

விழா பள்ளி தாளாளர் பாபா அமீர் பாதுஷா  தலைமையில்   தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவரும்,  ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான 

 பேராசிரியர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினர், 

கௌரவ விருந்தினராக முறையூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமுத வள்ளி பங்கேற்று சிறப்புரையாற்றினர், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சிவகங்கை மாவட்ட அரசு டவுன் காஜி கே.எம்.முகமது பாரூக் ஆலிம் வாழ்த்துரையாற்றினார், முன்னதாக அனைவரையும் பள்ளியின் முதல்வர் வரதராஜன் வரவேற்றார், விழாவில் மழலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, பள்ளி தாளாளர் பாபா அமீர் பாதுஷா, சிறப்பு விருந்தினர் பேராசிரியர் கோபிநாத், கௌவுரவ விருந்தினர் அமுத வள்ளி ஆகியோர் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கினர். விழா நிகழ்வை ஆசிரியை சந்தான லட்சுமி தொகுத்து வழங்கினார்.  ஒருங்கிணைப்பாளர் மெகர் பானு நன்றி கூறினார்‌. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், கல்வி ஆலோசகர் ஷேக், மகதூன், ஹாபிஸ் ஷகாபுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.