BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
அருள்மிகு வின்னி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
ஆன்மிகம் Breaking

அருள்மிகு வின்னி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

By Admin • September 07, 2026 03:43 PM • 37 views

வின்னி விநாயகர் கும்பாபிஷேக விழா

காரைக்குடி செப் :08 

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டம் குன்றக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன குன்றக்குடி வீழி ஊரணி மேல்கரையில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு வின்னி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46வது குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் டாக்டர் விகாஸ் ரத்னா சிவத்திரு பிச்சை குருக்கள் முன்னிலையிலும்  நடைபெற்றது. செப் - 6  காலை மணி முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் தனபூஜை பூர்ணா குதி நிறைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்பு மாலை 4.15  மணியளவில் முதல் கால யாக பூஜை துவங்கி மகா பூர்ணாகுதி நிறைவு பெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நேற்று  காலை முதல் இரண்டாம் கால யாக பூஜை இனிதே துவங்கி மகா பூர்ணாகுதி நிறைவு பெற்று தீபாராதனை காட்டப்பட்டு, குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோயில் சர்வ சாதகம் சிவ ஸ்ரீ ச. செந்தில்நாதன் குருக்கள் தலைமையில் கடம் புறப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவினை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது. இம்மாபெரும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டினை ஊரார்கள், சின்ன குன்றக்குடி துபாய் , மற்றும் சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.