BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
இளையாத்தங்குடி கைலாச விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா
ஆன்மிகம் Breaking

இளையாத்தங்குடி கைலாச விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா

By Admin • September 15, 2026 01:59 PM • 35 views

விநாயகர் சதுர்த்திப் பெருவிழா

திருப்புத்தூர், செப். 15 - 

சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி கோயில் ஒக்கூர் நகரத்தாரின் கைலாச விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா  நடைபெற்றது.

                 கைலாச விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் பெருமான் வெள்ளி திருவாச்சி அங்கியுடன் இரு  தந்தங்களுடன்  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  தொடர்ந்து உற்சவரை பெரிய கோயிலிலிருந்து அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்று அனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜையுடன் அஷ்டோத்திர108 கலச பூஜை, கோபூஜை, பிரம்மச்சாரி பூஜை, பூர்ணாஹூதி  நடைபெற்றது.  பின்னர்  கடப்புறப்பாடு நடைபெற்று 108 கலச  அபிஷேகத்தைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சாற்றப்படும் யானைத் தந்தத்துடன் வெள்ளி அங்கி லங்காரத்தில் மூலவர்  அருள்பாலித்தார். பின்னர்  மகா தீபாராதனை  நடைபெற்று  16 மங்கலப் பொருள்கள்  ஏலமிடப்பட்டது. மாலை 3 மணிக்கு  விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்று மாலை 5 மணிக்கு உற்சவ பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இவ்விழாவில் ஒக்கூர் நகரத்தார் சாதனையாளர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர். இரவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நடப்பு நிர்வாக காரியதாரர் ராங்கியம் எஸ்.ராமு, இணை நிர்வாக காரியக்காரர் எஸ்.அண்ணாமலை,  நிர்வாக காரியக்காரர்கள் அண. சிவப்பிரகாஷம், மி.சுப்பிரமணியன், அண.தமிழரசு,கண.சோமசுந்தரம்,  ஓய்.ராமநாதன்,மற்றும் இளையாத்தங்குடி ஒக்கூர் நகரத்தார் செய்திருந்தனர்.