BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 47-ஆம் ஆண்டு மின்னொளியில் மாதாவின் சொரூபம்  தேர்பவனி
ஆன்மிகம் Breaking

சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 47-ஆம் ஆண்டு மின்னொளியில் மாதாவின் சொரூபம் தேர்பவனி

By Admin • September 07, 2026 03:40 PM • 31 views

பங்கு இறை மக்கள் பங்கேற்று வழிபாடு

சிங்கம்புணரி செப் :08

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்கு மக்கள் முன்னிலையில் சிறப்பு திருப்பலியுடன் திருக்கொடியேற்றம் நடைெபெற்றது.

மூன்றாம் நாள் செப்டம்பர் 6-ம் தேதி புனித ஆரோக்கிய அன்னையின்  பிறப்புபெருவிழாவில் பேரருட்தந்தை ஆனந்து நாக்கோந்து தலைமை ஏற்று அருள்முனைவர் லாரன்ஸ்போஸ் மற்றும் அருட்பணியாளர்களுடன் ஆடம்பர திருவிழா கூட்டுத் திருப்பலியை நடத்தினர்.

அதை தொடர்ந்து மின்னொளியில்  அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 47-ஆம் ஆண்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவின் சொரூபம் ஏற்றப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

தொடர்ந்து மாதாவின் சொரூபம் ஏற்றப்பட்ட தேர் பவனியில் அருட்சகோதரிகள் ஜெபமும், பாட்டும் பாடிக்கொண்டே திண்டுக்கல் ரோடு,பேருந்துநிலையம்,பெரியகடை வீதி,சுந்தரம் நகர் வழியாக பவனி வந்து ஆலயத்தை சென்றடைந்தனர்.

இந்நிகழ்வில் சிங்கம்புணரி, தெக்கூர்,நெற்குப்பை,மாதாபுரம்,கருங்காலக்குடி பங்கு  இறை மக்கள் பங்கேற்றனர்.