BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் மழை வேண்டி கிராம மக்கள் வருண பகவானுக்கு சிறப்பு யாக பூஜை
ஆன்மிகம் Breaking

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் மழை வேண்டி கிராம மக்கள் வருண பகவானுக்கு சிறப்பு யாக பூஜை

By Admin • October 16, 2026 06:42 AM • 7 views

மழை வேண்டி கிராம மக்கள் வருண பகவானுக்கு சிறப்பு யாக பூஜை

சிங்கம்புணரி அக் :16

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் கண்மாய், விவசாயக் கிணறுகள், பாலாறு, போன்றவைகளில் நீர் இல்லாமல் கால்நடைகள் கூட குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது மேலும் நீரில்லாமல் இப்பகுதிகளில் விவசாயம் முற்றிலும் இல்லாமல் போனது, இப்பகுதிகளில் நெல் நடவு,கடலை,பருத்தி,மிளகாய் உள்ளிட்ட விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நேற்று வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து நல்லமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிங்கம்புணரி கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் மழை வரம் வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.

இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் மழை வேண்டி யாக சாலை வைத்து ஒன்பது கலசங்கள் வைத்து வருண வேள்வி,வருண காயத்திரி ஜபம், கோ பூஜை ,வருண சூக்க பாராயணம் போன்றவை நடைபெற்றது.

முன்னதாக சிவாச்சாரியார்கள் மழை வேண்டி 108 விசேஷ மூலிகைகள் கொண்டு ஆண்டு வேள்வி நடத்தப்பட்டு பின்னர் மூலவர் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள உற்சவர்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜை தீபாராதனை நடைபெற்றது.

இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.