BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி வைபவம்
ஆன்மிகம் Breaking

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி வைபவம்

By Admin • September 15, 2026 01:38 PM • 29 views

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.!

திருப்புத்தூர் செப் :15

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தீர்த்தவாரி வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற குடவரை கோவிலில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இவ்விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீர்த்தவாரி வைபவம் திருக்குளத்தில் தற்பொழுது நடைபெற்றது. நேற்று முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்தில் காட்சியளித்தார். உற்சவர் ஸ்ரீகற்பக விநாயகர் மூலவர் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் கோயிலில் இருந்து நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க விநாயகப் பெருமானின் அங்குசதேவர் புறப்பாடாகி கோயிலை சுற்றி வலம் வந்த பின்பு,  திருநாள் மண்டபத்தில் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு பன்முக தீபாரதனை, கும்ப தீபாரதனை, பஞ்சமுக தீபாரதனை உள்ளிட்ட தீபாரதனைகள் நடைபெற்றன. பின்பு உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் வடக்கு வாசல் எதிரே உள்ள திருகுளக்கரையிலும், அங்குசதேவர் படித்துறையிலும் எழுந்தருளினர். அங்கு, தேவர பாடல்களுடன் அங்குச தேவருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை நடைபெற்றது. பின்னர் பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ கோயில் குளத்தில் சிவாச்சாரியார் அங்குசதேவரை மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி வைபவத்தை நடத்தினார். நிறைவாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இந்த தீர்த்தவாரியை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, கோவில் குளத்தை சுற்றிலும் நின்று ஸ்ரீ கற்பக விநாயகர் பெருமானை தரிசனம் செய்தனர்.