திருப்புத்தூரில் இரவில் படுத்து கிடந்த இளைஞருக்கு திடீர் உற்சாகத்தை அளித்த மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி!
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி!
திருப்புத்தூர் ஆக :16
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி தனது நிறுவனத்தின் தயாரிப்பில் நிதீஷ் சஹதேவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ஓட்டுநர் உண்ணி, ஜார்ஜ், ரமேஷ் பிஷாரடி, மம்முட்டி ஆகியோர் இரவு காரைக்குடியிலிருந்து கேரளாவுக்கு திருப்புத்தூர் வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருப்புத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அந்த வழி மூடப்பட்டது. இதனால் கூகுள் மேப் உதவியுடன் செல்ல முற்பட்டனர். ஆனால் வழக்கம் போல கூகுல் மேப் திருப்புத்தூரையே சுற்றி காண்பித்துள்ளது. பல வழிகளில் சுற்றி அழைத்துச் சென்றாலும் எதுவும் பலனளிக்கவில்லை. ஒரு மணி நேரம் கழித்து கடுப்பான மம்முட்டி, காரைக்குடியில் நாம் தங்கி இருந்த அறைக்கு திரும்பிவிடலாம். நாளை காலையில் ரோடு திறந்திருக்கும் போய்க்கலாம் எனக்கூறி நாளைக்கான திட்டங்கள் பாழாய் போயின என மலையாளத்தில் புலம்பியபடி திரும்பி செல்லும் வழியில் பட்டமங்கலத்தில் பெட்ரோல் பங்க். கொசுவலைக்குள் தூங்கிய இளைஞரிடம் ஓட்டுநர் உன்னி வழி கேட்டுள்ளார். அவர் சொன்ன வழிகளும் ஏற்கனவே அடைக்கப்பட்டு இருந்தது. சற்று தூரத்தில் தூங்கிய மற்றொருவர் வந்தார். “நீங்கள் மலையாளிகளா?” என்று கேட்டு, காருக்குள் எட்டி பார்த்த போது. முகம் உற்சாகத்தில் மலர்ந்தது. “நீங்கள் மம்மூட்டி சாரா!! என்னை ஃபாலோ செய்யுங்கள்...” என்று சொல்லி பைக்கில் கூகுளுக்கே தெரியாத வழிகளில் சுமார் 10 கி.மீ. மம்முட்டியின் காருக்கு முன்னால் சென்று வழிகாட்டினார். “அப்படியே ஸ்ட்ரெய்ட்டா போனா கேரளாதான்...” என்று சொல்லி கையசைத்து மகிழ்ந்தார். இக்கட்டான சூழ்நிலைகள் தனக்கு பத்து கிலோமீட்டர் வழி காட்டிய நபரை பாராட்ட நினைத்த மம்மூட்டி அவரது உதவி அவர்களிடம், அவர் நல்ல மனிதர். பிஷாரடி, “அவர் நாளை யாரிடமாவது அதிகாலை மம்மூட்டியைப் பார்த்தேன், வழி காட்டினேன் என்றால் யாரேனும் நம்புவார்களா?” என்று கூறியபடி. மம்முட்டி காரிலிருந்து இறங்கி, அந்த இளைஞரின் போனை வாங்கி பிஷாரடியிடம் கொடுத்தார். அவரை அணைத்து, “உன் பெயர் என்ன?” என்ன வேலை பார்க்கிறார் என கேட்டுள்ளார். அப்போது அவர் “பாண்டியன்.” எனது சொந்த ஊர் பூலாங்குறிச்சி நான் கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறேன் என்றார். பிஷாரடி, எங்களை போட்டோ எடுத்து “அவருடைய கவனத்தை நாம் சமூக ஊடகங்களில் பகிர வேண்டும், ஆன்டோ சேட்டா...” என்று கட்டளை இட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.