BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
காரைக்குடி பர்மா காலனி ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி பெருவிழா
ஆன்மிகம் Breaking

காரைக்குடி பர்மா காலனி ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி பெருவிழா

By Admin • September 12, 2026 04:37 AM • 24 views

சதுர்த்தி பெருவிழா

காரைக்குடி செப் :09

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி பெருவிழா மற்றும் உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு சிறப்பு பூஜை  நடைபெற்றது. காலை ஐந்து முப்பது மணி முதல் கணபதி ஹோமம் கோ பூஜை அபிஷேகம் திருமுறை வழிபாடு  சிறப்பாக நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் உலக நன்மை வேண்டி திருநாவுக்கரசு இறை நற்பணி மன்றத்தின் திருமுறை பாராயணம் நிகழ்வு குழுவினர்களால்  நடத்தப்பட்டது. விழாவில் ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி ஹெரிடேஜ் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டினை ஸ்ரீ காயத்ரி கன்சல்டன்ட் நிறுவனரும் நகர சிவன் கோவில் அத்யான பட்டர் ரொட்டேரியன் என்.ரவிசாமி ஏற்பாடு செய்திருந்தார்.