இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்தியகல்யாணி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா
அம்மன் கோயில் வருடாபிஷேக விழா
திருப்புத்தூர், செப், 16 -
சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
ஸ்ரீ கைலாசநாதர் நித்தியகல்யாணி அம்மன் ரகோயில் வருடாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை விக்னேஸ்வர் பூஜையுடன் தொடங்கியது. விழா நாளான நேற்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், தனபூஜை பூர்ணாஹூதி நடைபெற்று சிறப்பு அபிஷேகம் கைலாசநாதருக்கும், நித்தியகல்யாணி அம்மனுக்கும் நடைபெற்றது. இதில் நகரத்தார் மற்றும் நாட்டார்கள், இளையாத்தங்குடி கிராமத்தார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்தியகல்யாணி அம்மன்கோயில் தேவஸ்தான அறக்கட்டளைத் தலைவர் லெட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.