யோகாவில் சாதனை படைத்த சாய் சர்வேஷ்
யோகாவில் சாதனை
காரைக்குடி ஆக :26
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி, பழனிச்சாமி சாமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த சாய் சர்வேஷ், செல்லப்பா வித்யா மந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மாணவர். இவர் யோகாவில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்.
தமிழ்நாடு யோகா திருவிழா–2026-ல் பொதுப் பிரிவில் முதல் பரிசும், தனிநபர் Leg Balancing லெக் பேலன்ஜிங் பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். மேலும், ஒரு மணி நேரம் தொடர்ந்து யோகாசனங்களைச் செய்து உலக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இலங்கை கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச சிலபஸ் யோகா போட்டியிலும் முதல் இடம் பெற்றுள்ளார்.
யோகா பயிற்சியாளர் அனிதா ராமசாமி வழிகாட்டுதலில் தொடர்ந்து பயிற்சி பெற்று வரும் சாய் சர்வேஷின் சாதனைகள், அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சிக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளன.
அமைச்சர் டாக்டர் பிரபு விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலையில், பின்னர் சாய் சர்வேஷை நேரில் சந்தித்து அவரது சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சாய் சர்வேஷின் தாத்தா கே.தர்மலிங்கம், ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர். அவரது தாயார் டாக்டர் டி.பாண்டிசெல்வி, அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
இளம் வயதிலேயே யோகாவில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் சாய் சர்வேஷ், மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவருக்கு மேலும் பல உயரிய சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துகள்!